சுடச்சுட

  

  காவேரிப்பாக்கம் அருகே உள்ள கீழ்வீராணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் (33). கரும்பு வெட்டும் தொழிலாளி. மனைவி தமிழ்ச்செல்வி (23), மகள்கள் ரஞ்சிதா (7), பவித்ரா (5).

  இந்நிலையில் ஆற்காட்டை அடுத்த கலவை அருகே உள்ள அல்லாலச்சேரி கிராமத்தைச் சேர்ந்த அவரது உறவினரான பழனி வீட்டுக்கு பைக்கில் சென்றுள்ளனர். பின்னர், கிளாந்தாங்கல் கிராமத்தில் நடந்த மாரியம்மன் திருவிழாவுக்கு ராஜகோபால், தமிழ்ச்செல்வி, ரஞ்சிதா, பவித்ரா மற்றும் அவரது உறவினர் பெண் ஆனந்தி (17) ஆகியோர் ஒரே பைக்கில் சென்றனர்.

  திருவிழா முடிந்து வீட்டுக்குத் திரும்பி வந்தபோது அல்லாலச்சேரி அருகே சாலையின் குறுக்கில் அமைக்கப்பட்ட வேகத் தடையில் ஏறி இறங்கும்போது நிலை தடுமாறி பைக் கவிழ்ந்தது. இதில் ராஜகோபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

  மேலும் படுகாயமடைந்த நால்வரும் வேலூரில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு பவித்ரா உயிரிழந்தார்.

  இது குறித்து கலவை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai