Enable Javscript for better performance
பைக் மோதி சிறுமி சாவு; சிறுவன், இளைஞர் படுகாயம்- Dinamani

சுடச்சுட

    

    வேலூர் அருகே, அரியூரை அடுத்த சிவநாதபுரம், கல்லாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால். அவரது மகள் தீபா (5). சிறுமியுடன் அதே பகுதியைச் சேர்ந்த சின்னதம்பி மகன் விக்னேஷ் (5) அப்பகுதியில் உள்ள அங்கன்வாடிக்கு புதன்கிழமை சென்று திரும்பினான். அப்போது அதே ஊரைச் சேர்ந்த குமரவேல் (35) மோட்டார் சைக்கிளில் வேகமாக அப்பகுதியில் வந்தார்.

    அப்போது நிலைதடுமாறி சிறார்கள் இருவர் மீதும் வாகனம் மோதி கீழே விழுந்தது. இதில் விக்னேஷ், தீபா மற்றும் குமரவேல் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

    மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் தீபா இறந்தார். மற்ற இருவரும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இச்சம்பவம் குறித்து அரியூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai