சுடச்சுட

    

    குடியாத்தம் நகரில் மக்களைத் தேடிச் சென்று குறை கேட்கும் திட்டம் புதன்கிழமை தொடங்கியது.

    குடியாத்தம் நகர்மன்றத் தலைவர் அமுதாசிவப்பிரகாசம் நகர மக்களின் குறைகளைத் தீர்க்க வார்டுவாரியாகச் சென்று மனுக்கள் பெற முடிவெடுத்தார்.

    இதன் முதல்கட்டமாக, 1 மற்றும் 6-வது வார்டுகளுக்கு  புதன்கிழமை மாலை சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்து அவரிடம் மனுக்கள் அளித்தனர்.

    பெரும்பாலானவர்கள் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் கோரி மனுக்கள் அளித்தனர்.

    மனுக்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமுதா சிவப்பிரகாசம் உறுதி அளித்தார்.

    நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜி.உமாமகேஸ்வரி, மேலாளர் சந்திரசேகரன், சுகாதார அலுவலர் எஸ்.ராஜரத்தினம், நகர்நல அலுவலர் நளினாதேவி, சுகாதார ஆய்வாளர்கள் பிரகாஷ், சிவா உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

    வார்டுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, வாரத்தில் ஒரு நாள் என நகரில் உள்ள 36 வார்டுகளுக்கும் சென்று மக்களிடம் குறை கேட்கப்படும் என அமுதா சிவப்பிரகாசம் கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai