சுடச்சுட

  

  படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி மாநிலச் செயலர் சு.வெள்ளையப்பனின் ஆன்மா சாந்தியடைய இந்து முன்னணி,  ஜலகண்டேஸ்வரர் கோயில் தரும ஸ்தாபனம், இந்து மக்கள் கட்சி ஆகியன சார்பில் மோட்ச தீபம் புதன்கிழமை ஏற்றப்பட்டது.

  சு.வெள்ளையப்பன் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் இந்து முன்னணியின் மாவட்டத் தலைவர் மகேஷ் தலைமையில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

  இந்து முன்னணியின் மாநில வழக்குரைஞர் பிரிவுச் செயலர் ரத்தினகுமார், வேலூர் மாநகரப் பொறுப்பாளர் ஆதிமோகன், அண்ணா நகர் பொறுப்பாளர் கோபி மற்றும் திரளான இந்து முன்னணியினர் பங்கேற்றனர்.

  வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் மோட்ச தீபம் ஏற்றினார்.

  மாநில அமைப்புக்குழு தலைவர் பொன்னுசாமி, மாநில அமைப்புச் செயலர் கணபதி ரவி, மாவட்ட அமைப்பாளர் பழனி, மாவட்டத் தலைவர் சீனிவாசன், மாவட்டச் செயலர் அசோக் மற்றும் கோயில் தரும ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் உடனிருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai