சுடச்சுட

    

    வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் செல்போன் ஒன்று சிம் கார்டுடன் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

    குடியாத்தம் தாலுகா, குள்ளாம்பாடியைச் சேர்ந்தவர் பழனி (51). கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இவர் வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் உள்ளார். அவர் செல்போன் வைத்திருப்பதை அறிந்த வார்டன் சம்பத் புதன்கிழமை சோதனையிட்டார். அவரிடம் செல்போன் இல்லை.பிறகு அவரிடம் விசாரணை நடத்தியதில், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, செட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தனிடம் (48) கொடுத்து வைத்திருப்பதாகத் தகவல் அளித்தார். அதைத் தொடர்ந்து கோவிந்தனை சோதனையிட்டபோது அவரிடம் செல்போனும், சிம் கார்டும் இருப்பது தெரியவந்தது.

    அதையடுத்து இருவர் மீதும் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. காவல் நிலையத்தில் செல்போன் ஒப்படைக்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai