சுடச்சுட

  

  வறுமை காரணமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல், இடைநின்ற 4 மாணவர்களை அதிகாரிகள் மீட்டு பள்ளியில் சேர்த்தனர்.

  குடியாத்தம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் கே.பாபு தலைமையிலான கல்வித் துறையினர், பல்வேறு காரணங்களால் பள்ளிக்குச் செல்ல முடியாமல் இடைநின்ற மாணவர்கள் குறித்து கடந்த சில நாள்களாக விசாரணை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் நெல்லூர்பேட்டையை அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பியூலா (14), சுந்தர் (13) ஆகியோரை புதன்கிழமை மீட்டனர்.

  பியூலாவை நெல்லூர்பேட்டை அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளியிலும், சுந்தரை அரசினர் மேல்நிலைப் பள்ளியிலும் 7ஆம் வகுப்பில் சேர்த்தனர்.

  பெரியார் நகரைச் சேர்ந்த பாபு (11), பொகளூரைச் சேர்ந்த விஜய் (13) ஆகிய இருவரையும் வியாழக்கிழமை மீட்டனர்.

  நெல்லூர்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பாபுவை 6ஆம் வகுப்பிலும், விஜயை 8ஆம் வகுப்பிலும் சேர்த்தனர்.

  அவர்களுக்கு பள்ளித் தலைமையாசிரியர் டி.எஸ்.விநாயகம், விலையில்லா பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடைகள் ஆகியவற்றை வழங்கினார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் கே.பாபு, ஆசிரியர் பயிற்றுநர் எம்.சாம்பசிவம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai