Enable Javscript for better performance
கணவரை தற்கொலைக்குத் தூண்டியதாக மனைவி உள்பட 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கணவரை தற்கொலைக்குத் தூண்டியதாக மனைவி உள்பட 2 பேர் கைது

    By குடியாத்தம்  |   Published on : 05th July 2013 03:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கணவரை தற்கொலைக்கு தூண்டியதாக மனைவி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    குடியாத்தத்தை அடுத்த பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கல் அறுக்கும் தொழிலாளி குப்பன் (35). இவரது மனைவி மகாலட்சுமி (27). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

    இந்நிலையில் செவ்வாய்க்கிழமையும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மகாலட்சுமி ஒடுக்கத்தூரில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்று விட்டாராம்.

    இதனால் விரக்தியடைந்த குப்பன் செவ்வாய்க்கிழமை இரவு விஷமருந்தினாராம். குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் புதன்கிழமை இறந்தார். இச்சம்பவம் குறித்து பரதராமி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் குப்பனை தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது மனைவி மகாலட்சுமி, அவருக்கு உதவியாக இருந்ததாக கொச்சாலூரைச் சேர்ந்த லோகநாதன் (20) ஆகிய இருவரையும் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai