Enable Javscript for better performance
கலவையில் சோலார் மின் விளக்கு:  ஆட்சியரிடம் நிதியளிப்பு - Dinamani

சுடச்சுட

    

    கலவையில் சோலார் மின் விளக்கு:  ஆட்சியரிடம் நிதியளிப்பு

    By வேலூர்  |   Published on : 05th July 2013 03:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கலவையில் சோலார் மின் விளக்கு அமைப்பதற்கான பொதுமக்களின் பங்களிப்பு நிதி மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

    தன்னிறைவுத் திட்டம் 2013-14-ன் கீழ் கலவை பேரூராட்சியில் பெருமாள் கோயில் குளத்தை சுற்றியுள்ள நடைபாதையில் ரூ.3.15 லட்சம் செலவில் சோலார் மின் விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்பாக ரூ.1.05 லட்சத்துக்கான காசோலையை பொதுமக்கள் சார்பில் என்.ஜனார்தனன் என்பவர் மாவட்ட ஆட்சியர் பொ.சங்கரிடம் வழங்கினார். பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் எஸ்.எம்.மலையமான் திருமுடிகாரி, பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் என்.ராஜா, கலவை பேரூராட்சித் தலைவர் ஜெயகுமார், செயல் அலுவலர் ஆர்.தேவதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai