சுடச்சுட

    

    ஆம்பூர் நகராட்சிக்கு ஆணையரை நியமிக்கக் கோரியும், குடிநீர் கேட்டும் பொதுமக்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆம்பூர் நகராட்சி அலுவலகம் முன்பு 4-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் இ.சுரேஷ்பாபு தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தங்கள் பகுதிக்கு போதிய அளவு குடிநீர் விநியோகம் செய்யக் கோரியும், பழுதடைந்துள்ள உயர் கோபுர மின்விளக்கை சரிசெய்ய வலியுறுத்தியும், நகராட்சிக்கு ஆணையரை நியமிக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் காலி குடங்களுடன் கலந்து கொண்டனர்.

    ஆணையர் (பொறுப்பு) எல்.குமாரை சந்தித்து புகார் தெரிவிக்க இருந்தபோது அவர் அலுவல்ரீதியான கூட்டத்தில் பங்கேற்க வெளியூர் சென்றிருப்பதாகத் தெரிவித்தனர். அதனால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai