சுடச்சுட

  

  குப்பையில் புதைக்கப்பட்ட 50 கேன் ஸ்பிரிட் பறிமுதல்

  By அரக்கோணம்  |   Published on : 05th July 2013 03:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரக்கோணம் அருகே குப்பையில் புதைக்கப்பட்டிருந்த 50 கேன் ஸ்பிரிட்டை வேலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

  அரக்கோணத்தை அடுத்த பள்ளூரில் ஒரு வீட்டின் பின்புறம் ஸ்பிரிட், கேன்களில் அடைத்து புதைக்கப்பட்டிருப்பதாக வேலூர் மாவட்ட அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பிரிவின் டி.எஸ்.பி. முத்துராமலிங்கம், இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீஸார் குறிப்பிட்ட வீட்டில் சோதனை நடத்தினர்.

  அப்போது வீட்டின் பின்பக்கம் இருந்த மாட்டுசாணக் கழிவு மற்றும் மக்கிய குப்பைகளின் உள்ளே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கேன் ஸ்பிரிட்டை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஸ்பிரிட் சாராயம் தயாரிக்க கொண்டு வரப்பட்டதாகவும் இங்கு தயாரிக்கப்படும் சாராயம் காஞ்சிபுரம், திருவள்ளுர் மற்றும் சென்னை மாநகரத்துக்கு அனுப்பப்படுவதாகவும் போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

  இது தொடர்பாக ரவி என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

  இந்தப் பதுக்கல், விற்பனையில் முக்கியப் புள்ளிகள் இருப்பதாகவும், இது ஆந்திரம் அல்லது கர்நாடகத்தில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் எனவும் இது தொடர்பான விரிவான விசாரணைக்கு உடனடியாக உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai