சுடச்சுட

    

    கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் ரூ.10 லட்சம் பறிமுதல்

    By வேலூர்  |   Published on : 05th July 2013 03:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் கற்பகம் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வியாழக்கிழமை நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை வழங்கப்படுமென தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டு ரூ.12 கோடி நிதியை ஒதுக்கீடு செய்திருந்தார்.

    அதனடிப்படையில் 1999 முதல் 2013 வரையிலான ஆண்டுகளுக்கு ஊதிய நிலுவைத் தொகையை ஊழியர்களுக்கு வழங்குவதற்காக அரசிடமிருந்து பணம் வரப்பெற்றுள்ளது.  தற்போது அதனை வழங்கும் பணி நடந்து வருகிறது. 

    வேலூர் அண்ணா சாலையில் உள்ள கற்பகம் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை அலுவலகத்தில் ஊழியர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை வழங்கும் பணி நடந்து வருகிறது.

    நிலுவைத் தொகையை வழங்க ஊழியர்களிடம் லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.  அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். வியாழக்கிழமை காலை சுமார் 10.45 மணிக்கு பண்டக சாலை அலுவலகத்துக்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் அலுவலகத்தின் கதவுகளைப் பூட்டினர்.  எவரும் உள்ளே செல்லவோ, வெளியேறவோ  அனுமதிக்கப்படவில்லை. சோதனையின்போது மறைவிடத்தில் துணியில் சுற்றி வைக்கப்பட்டிருந்த ரொக்கப் பணம் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீஸார் எடுத்துப் பார்த்ததில் ரூ.10 லட்சத்துக்கும் மேல் இருந்துள்ளது.

    இதுகுறித்து அங்கு பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai