Enable Javscript for better performance
மாணவிக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    : நாட்டறம்பள்ளி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

    வாணியம்பாடி-நாட்டறம்பள்ளி இடையே ஆறு வழி தேசிய நெடுஞ்சாலைப் பணி நடைபெற்று வருகிறது. இதில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் குணசேகரன் (35). இவர் சில நாள்களுக்கு முன்பு நாட்டறம்பள்ளி அருகே பள்ளிக்குச் சென்ற ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதனையறிந்த பொதுமக்கள் குணசேகரனை பிடித்து நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இந்த வழக்கு வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து காவல் ஆய்வாளர் மகாலட்சுமி வழக்குப் பதிந்து குணசேகரனை புதன்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai