Enable Javscript for better performance
ரூ.4.2 லட்சம் மதிப்பு தோல்கள் திருட்டு: 8 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ரூ.4.2 லட்சம் மதிப்பு தோல்கள் திருட்டு: 8 பேர் கைது

    By வாணியம்பாடி  |   Published on : 05th July 2013 03:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாணியம்பாடி அருகே ரூ.4.20 லட்சம் மதிப்பிலான ஆட்டுத் தோல்களை திருடியதாக 8 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

    வாணியம்பாடி கோணாமேடு பகுதியைச் சேர்ந்தவர் கோலப்பன் (40). இவர் அதே பகுதியில் தோல் நிறுவனங்களிலிருந்து ஆட்டுத் தோல்களை வாங்கி லெதர் பினிஷிங் செய்து கொடுத்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த ஜூலை 1ஆம் தேதி இரவு கடையின் பின்புறம் இருந்த ஓட்டை பிரித்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் 758 ஆட்டுத் தோல்களை திருடிச் சென்றது தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு ரூ.4.20 லட்சம் எனக் கூறப்படுகிறது.

    இதுகுறித்து கோலப்பன் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து தனிப்படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர்கள் சேகர், பாஸ்கர், காசி, தலைமைக் காவலர் கார்த்திக் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் வியாழக்கிழமை காலை கோணாமேடு பகுதியில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக 50 ஆட்டுத் தோல்களை வைத்திருந்த வஸந்த்குமார் (23) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் வஸந்தகுமாரும், பிகேஆர் காலனி, அண்ணா நகர், கட்டமேடு பகுதிகளைச் சேர்ந்த விஜய் (20), கங்கா (20), உதயக்குமார் (25), செல்வராஜ் (25), விமல்குமார் (29), தென்னரசு (25), லெனின் (22) ஆகியோர் 758 ஆட்டுத் தோல்களைத் திருடியது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களை கைது செய்த போலீஸார் அனைத்து ஆட்டுத் தோல்களையும் மீட்டனர். மேலும் திருட்டுக்கு பயன்படுத்திய 2 லோடு ஆட்டோக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai