சுடச்சுட

  

  பல்வேறு பணியிடங்களுக்கு வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலவகத்தில் பதிவை சரிபார்த்துக்கொள்ள மாவட்ட ஆட்சியர் பொ. சங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

  190 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கு இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு (வேதியியல்) மற்றும் சுகாதார ஆய்வாளர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 19 ஆஃப்செட் மெஷின் டெக்னீஷியன் பணியிடங்களுக்கு டிப்ளமோ இன் பிரிண்டிங் டெக்னாலஜி படித்திருக்க வேண்டும். 57 உதவி ஆஃப்செட் மெஷின் டெக்னீஷியன் பணியிடங்களுக்கு டிப்ளமோ இன் பிரிண்ன்டிங் டெக்னாலஜி படித்திருக்க வேண்டும். ஒரு சிறப்பு மொழி ஆபரேட்டர் பணியிடத்துக்கு ஹிந்தி, மலையாளம், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, கிராந்தம் இவற்றில் ஏதேனும் ஒரு மொழியில் டிடீபி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஒரு பேஸ்ட் ஆஃப் ஆர்ட்டிஸ்ட் பணியிடத்துக்கு ரீட்டச்சிங், பிளேட் பிராசஸிங் சான்றிதழுடன் டிடீபி சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும்.

  மேலே குறிப்பிடப்பட்ட கல்வித் தகுதியை பெற்றிருக்கும் வேலூர் மாவட்டப் பதிவுதாரர்கள் ஜூலை 8-ம் தேதிக்குள் வேலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்குச் சென்று தங்களின் பதிவை சரிபார்த்துக் கொள்ளலாம்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai