சுடச்சுட

  

  இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் மீது ஜலகண்டேஸ்வர் கோயில் பாதுகாப்புக் குழுவினர் போலீஸில் வெள்ளிக்கிழமை புகார் செய்தனர்.

  வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலை இந்து சமய அறநிலையத் துறை அண்மையில் கையகப்படுத்தியது. அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. கோயில் பாதுகாப்புக் குழு, இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

  இந்நிலையில் உதவி ஆணையர் பாரிவள்ளல் மற்றும் அதிகாரிகள் வியாழக்கிழமை காலை கோயிலுக்கு சென்று கட்டணச் சீட்டுக்களை அறிமுகப்படுத்த முயற்சி செய்தனர். அதற்கு கோயில் தரும ஸ்தாபன நிர்வாகிகள், கோயில் பாதுகாப்புக் குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் இரு தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு உதவி ஆணையர் அங்கிருந்து திரும்பிச் சென்றார்.

  இந்நிலையில், கோயில் பாதுகாப்புக் குழுவை சேர்ந்தவர்களை கட்டணச்சீட்டு வாங்கும்படி வற்புறுத்தியதாகவும், வாங்க மறுத்ததால் தரக்குறைவாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி கோயில் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த பாஸ்கரன் உள்ளிட்டோர் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் வீரப்பனிடம் புகார் அளித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai