சுடச்சுட

    

    ஆற்காட்டைச் சேர்ந்த 2 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

    By ராணிப்பேட்டை  |   Published on : 06th July 2013 05:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தொடர்ந்து வழிப்பறிச் செயல்களில் ஈடுபட்ட ஆற்காட்டைச்  சேர்ந்த 2 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ஆற்காட்டை அடுத்த பெரிய அசேன்புரா பகுதியைச் சேர்ந்தவர்கள் அலியார் (36), சுல்தான்(26). இருவரும் ஆற்காடு அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த மாதம் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் இவர்கள் இருவர் மீதும் ஆற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழிப்பறி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ஆற்காடு தாலுகா மற்றும் டவுன் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் வழிப்பறி குற்றச் செயல்களில் ஈடுபட்ட அலியார், சுல்தான் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவு வேலூர் மத்திய சிறையில் உள்ள இருவரிடமும் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai