சுடச்சுட

    

    பைக் மீது லாரி மோதல்: பெண் சாவு; கணவர் படுகாயம்

    By ராணிப்பேட்டை  |   Published on : 06th July 2013 02:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரத்தினகிரி அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் குடுகுடுப்பைக்காரரின் மனைவி சம்பவ இடத்திலேயே இறந்தார். கணவர் படுகாயமடைந்தார்.

    காட்பாடியை அடுத்த சேவூர் பகுதியைச்  சேர்ந்தவர் பூங்காவனம் (45). குடுகுடுப்பைக்காரர்.

    இவரது மனைவி தஞ்சக்கா (35). இருவரும் சேவூரில் இருந்து ஆற்காட்டை நோக்கி பைக்கில் வெள்ளிக்கிழமை மாலை சென்றனர். பைக் சென்னை - கிருஷ்ணகிரி 6 வழிச் சாலையில் ரத்தினகிரி அருகே உள்ள பூட்டுத்தாக்கு கிராமம் அருகே சென்றபோது பின்னால் வந்த டிப்பர் லாரி பைக் மீது மோதியது.

    இதில் சம்பவ இடத்திலேயே தஞ்சக்கா இறந்தார். படுகாயமடைந்த பூங்காவனம் வேலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து ரத்தினகிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai