சுடச்சுட

    

    விவசாயத் தம்பதி, மகனை கட்டிப்போட்டு நகை கொள்ளை

    By ராணிப்பேட்டை  |   Published on : 06th July 2013 02:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆற்காடு அருகே விவசாய நிலத்தில் தனி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த விவசாயத் தம்பதி, அவர்களது மகன் ஆகியோரை நள்ளிரவில் கட்டிப்போட்டு 10 பவுன் நகை, ரூ.80 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

    ராணிப்பேட்டையை அடுத்த திருவலம் அருகே உள்ள தொப்பளாமோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (60), விவசாயி. இவரது மனைவி சகுந்தலா (52). இவர்களது மகன் முருகானந்தம் (28).

    இவர்களுக்கு ரத்தினகிரி அருகே உள்ள கீழ்மின்னல் கொல்லைமேடு பகுதியில் நிலமும் வீடும் உள்ளது. அங்கு பழனி குடியேறி விவசாயம் செய்து வந்தார்.

    இந்நிலையில் வியாழக்கிழமை இரவு பழனி, சகுந்தலா ஆகிய இருவரும் வீட்டின் வெளியே தூங்கியுள்ளனர். முருகானந்தம் வீட்டு மாடியில் தூங்கச் சென்றுள்ளார். நள்ளிரவு 12 மணியளவில் 6 பேர் கொண்ட முகமூடி அணிந்த மர்மக் கும்பல் அங்கு வந்து பழனி, சகுந்தலா ஆகியோரை கயிற்றால் கட்டிவிட்டு வீட்டின் உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த நகைகள், ரொக்கப் பணத்தை எடுத்துள்ளனர். அப்போது பழனியும், சகுந்தலாவும் சப்தம் போட்டுள்ளனர். இதனால், மர்மக் கும்பலைச் சேர்ந்தவர்கள் அவர்களை கத்தியால் குத்தியுள்ளனர். அவர்களது அலறல் சப்தம் கேட்டு, முருகானந்தம் மாடியில் இருந்து ஓடிவந்துள்ளார்.

    அப்போது மர்மக் கும்பலைச் சேர்ந்தவர்கள் முருகானந்தத்தையும் கத்தியால் குத்தி கயிற்றால் கட்டி 3 பேரையும் ஓர் அறையில் தள்ளி பூட்டிவிட்டு பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள், ரூ.80 ஆயிரம் ரொக்கப் பணத்துடன் முருகானந்தத்தின் இருசக்கர வாகனத்தையும் எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டனர். இதனையடுத்து, அந்த வழியாகச் சென்றவர்கள் மூன்று பேரையும் விடுவித்தனர்.

    தகவலின் பேரில் ரத்தினகிரி போலீஸார் விரைந்து வந்து பழனியையும், சகுந்தலாவையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மாவட்ட எஸ்.பி. விஜயகுமார், ராணிப்பேட்டை டி.எஸ்.பி. லாவண்யா, காட்பாடி டி.எஸ்.பி. மதிவாணன் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். பின்னர் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. ரத்தினகிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai