சுடச்சுட

    

    செய்யாறு அருகே தனியார் நிறுவன பஸ்ஸýக்கு தீ வைத்ததாக கைது செய்யப்பட்ட இரண்டு பாமகவினர் குண்டர் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

    பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தின் போது ராந்தம்-காஞ்சிபுரம் சாலையில் மேல்பூதேரிக் கிராமத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் நிறுவன பஸ்ஸýக்கு 2.5.13 அன்று மர்ம கும்பல் தீவைத்தது.

    இதுதொடர்பாக மோரணம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பெருமாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த குமரன் (36), ராமச்சந்திரன் (26) ஆகிய இருவரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில், இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முத்தரசி, செய்யாறு டி.எஸ்.பி. சி.ரவிச்சந்திரன், காவல் ஆய்வாளர் செல்வழகன் ஆகியோர் பரிந்துரை செய்தனர். அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ச.வளர்மதி இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான உத்தரவின் நகல் வேலூர் சிறையில் உள்ள குமரன், ராமச்சந்திரன் இருவரிடமும் வழங்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai