Enable Javscript for better performance
அகில இந்திய பளுதூக்கும் போட்டி:சி.அப்துல் ஹக்கீம் கல்லூரி மாணவருக்குப் பதக்கம் - Dinamani

சுடச்சுட

    

    அகில இந்திய பளுதூக்கும் போட்டி:சி.அப்துல் ஹக்கீம் கல்லூரி மாணவருக்குப் பதக்கம்

    By ராணிப்பேட்டை  |   Published on : 07th July 2013 02:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பளுதூக்கும் போட்டியில் மேல்விஷாரம் சி.அப்துல் ஹக்கீம் கல்லூரியின் வரலாற்றுத் துறையின் மாணவர் எஸ்.மணிகண்டன் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.

    இப்போட்டி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள மோகன்லால் சுகாதியா பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில், எஸ்.மணிகண்டன் 56 கிலோ எடைப் பிரிவில் மொத்தம் 207.5 கிலோ எடையைத் தூக்கி, வெண்கலப் பதக்கம் பெற்றார்.

    இம்மாணவரை கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், மேல்விஷாரம் முஸ்லிம் கல்விச் சங்கத்தின் ஆட்சிக் குழு செயலர் எஸ்.ஜியாவூதின் அகமது, கல்லூரித் தாளாளர் எஸ்.இசட்.அப்ரார் அகமது, கல்லூரி முதல்வர் எஸ்.ஒய். அன்வர் ஷெரிப், உடற்கல்வி இயக்குநர் வி.ராஜா உள்ளிட்டோர் பாராட்டினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai