சுடச்சுட

    

    ஆற்று மணலில் புதைந்திருந்த விநாயகர் கற்சிலை, மூஞ்சுறு வாகனம் கண்டெடுப்பு

    By குடியாத்தம்  |   Published on : 07th July 2013 02:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடியாத்தம் அருகே, பாலாற்று மணலில் புதைந்திருந்த 100 ஆண்டுகளுக்கும் மேலான விநாயகர், மூஞ்சுறு வாகனம் ஆகிய கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

    இங்குள்ள பட்டு ஊராட்சிக்குள்பட்ட ஆலாம்பட்டறை கிராமம் அருகே பாலாற்றில் அரசு மணல் குவாரி உள்ளது. இங்கிருந்து மாட்டு வண்டிகளுக்கு மணல் சப்ளை செய்யப்படுகிறது.

    வெள்ளிக்கிழமை இரவு பாலாற்றில் மணல் எடுத்துக் கொண்டிருந்தபோது, சுமார் 3 அடி உயரமுள்ள விநாயகர் கற்சிலை மணலில் புதைந்திருந்தது தெரிய வந்தது. அதன் அருகில் சுமார் 1 அடி நீளமுள்ள மூஞ்சுறு வாகனமும் கண்டெடுக்கப்பட்டது.

    தகவலின்பேரில் அக்கிராம மக்கள் சிலைகளை எடுத்து வந்து ஊரில் உள்ள மாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள அரச மரம் அடியில் பீடம் அமைத்து அதில் சிலைகளை வைத்து வழிபடத் தொடங்கினர். இதுதொடர்பாக பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் சுமிதா சுரேஷ் அளித்த தகவலின்பேரில், வட்டாட்சியர் எம். கஜேந்திரன் சனிக்கிழமை அங்கு சென்று சிலைகளை பார்வையிட்டார். வருவாய் ஆய்வாளர் அன்பழகன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஸ்ரீதர், ஜீவரத்தினம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai