சுடச்சுட

    

    ஓய்வூதியர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    வேலூர் ஆசிரியர் இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில், மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஓய்வூதியர் நல வாரியம் அமைக்க வேண்டும். ஓய்வூதியர் இறந்துவிட்டால் அவர்களின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும்.

    ஓய்வூதியர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் காதர் மீரான், மாநில துணை பொதுச்செயலர் கலியபெருமாள், கெüரவ ஆலோசகர் ராமநாதன், மாநில பிரசாரச் செயலர் விசுவநாதன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai