சுடச்சுட

    

    ஜோதி உயர்நிலைப் பள்ளி ஆண்டு விழா மாணவர்களுக்குப் பரிசுகள், ஊக்கத் தொகை

    By குடியாத்தம்,  |   Published on : 07th July 2013 02:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஜோதி உயர்நிலைப் பள்ளியில் 34ஆம் ஆண்டு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

    விழாவுக்கு பள்ளித் தாளாளர் டி. ருக்மணியம்மாள் தலைமை வகித்தார். தலைமையாசிரியை பெ.பா. விஜயகுமாரி வரவேற்றார். நிர்வாகக் குழுத் தலைவர் டி. சேகர் ஆண்டறிக்கை வாசித்தார்.

    இதையொட்டி, 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கும், பிற வகுப்புகளின் சிறந்த மாணவர்களுக்கும் எம்எல்ஏ கு. லிங்கமுத்து ஊக்கத் தொகைகள், பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

    நகர்மன்றத் தலைவர் அமுதா சிவப்பிரகாசம், அதிமுக நகரச் செயலர் ஜே.கே.என். பழனி, நெல்லூர்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் டி.எஸ். விநாயகம், வழக்குரைஞர்கள் எம்.வி. ஜெகதீசன், ஆர். கோவிந்தசாமி, அன்னை இந்திரா காந்தி நடுநிலைப் பள்ளித் தாளாளர் டி. வாசு உள்ளிட்டோர் பேசினர். தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் மு. தியாகராஜன் நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai