சுடச்சுட

    

    தாலுகா தலைநகரங்களிலும் அம்மா உணவகம் திறக்க வலியுறுத்தல்

    By வாணியம்பாடி  |   Published on : 07th July 2013 02:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தாலுகா தலைநகரங்களிலும் அம்மா உணவகம் திறக்கப்பட வேண்டும் என்று வாணியம்பாடி நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நகர்மன்றத் தலைவர் நீலோபர் கபீல் தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில், மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பது உள்பட 47 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதையடுத்து, மழைநீர் சேகரிப்பு குறித்து விடியோ காட்சிகள் மூலம் நகர்மன்ற உறுப்பினர்களுக்கு நகரமைப்பு அலுவலர் காஜா மொய்தீன் செயல் விளக்கம் அளித்தார்.

    கூட்டத்தில் நகராட்சி ஆணையர் ரவி, நகர்மன்ற துணைத் தலைவர் ஆர்.விஜயகுமார், நகர்மன்ற உறுப்பினர்கள் கே.பிரகாசம், விமலன், நந்தினி, தேவிபாலா, தென்னரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai