Enable Javscript for better performance
திருமணமாகாத பெண்ணுக்கு பிறந்த குழந்தை மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    திருமணமாகாத பெண்ணுக்கு பிறந்த குழந்தை மீட்கப்பட்டது.

    இக்குழந்தையை வைத்துக் கொண்டு வேலூர் பென்லெண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் தடுமாறிய குழந்தையின் பாட்டியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    வேலூர் அரசு பென்லெண்ட் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை காலையில் புறநோயாளிகள் பிரிவில் சுமார் 40 வயது மதிக்கத்தக்கப் பெண் கையில் பச்சிளம் குழந்தையை வைத்துக் கொண்டு சுற்றி வந்தார்.

    அவரது நடவடிக்கைகள் சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்ததால், மருத்துவமனை ஊழியர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

    மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்க்கரசி அப்பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது, அவர் பேர்ணாம்பட்டைச் சேர்ந்த ரிஸ்வானா என்றும், இவரது 15 வயது மகளுக்கு திருமணமாகாமல் குழந்தை பிறந்துவிட்டதாகவும், அதை யாரிடமாவது கொடுப்பதற்காக வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    உடல்நலக் குறைவுடன் காணப்பட்ட அக்குழந்தை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.

    குழந்தை பெற்றெடுத்ததாக கூறப்படும் பெண்ணை பேர்ணாம்பட்டிலிருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் விசாரணைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை நடைபெறுவதாக போலீஸார் கூறினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai