சுடச்சுட

  

  காவேரிப்பாக்கத்தை அடுத்த அத்திப்பட்டு பாலாற்றிலிருந்து மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். இதனால், மாட்டு வண்டிகளில் இருந்த மணல் மீண்டும் பாலாற்றில் கொட்டப்பட்டது.

  இங்கிருந்து அளவுக்கு மீறி அதிகமாக மணல் எடுப்பதாக எழுந்த புகாரின்பேரில், மாட்டு வண்டிகளில் எடுத்துச் செல்ல அளிக்கப்பட்டிருந்த அரசு அனுமதி மாவட்ட நிர்வாகத்தால் திரும்பப் பெறப்பட்டது. இதையடுத்து, மீண்டும் மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று மாட்டு வண்டிகளின் உரிமையாளர்கள் அரசுத் துறையினரிடம் கோரிக்கை மனு அளித்து வந்தனர்.

  இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை அத்திப்பட்டு பாலாற்றில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளை கிராம மக்கள் மடக்கி சிறைபிடித்து முற்றுகையிட்டனர்.

  தகவலறிந்த காவேரிப்பாக்கம் காவல் ஆய்வாளர் சோமசுந்தரம், கிராம நிர்வாக அலுவலர் பாரதிதாசன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று மாவட்ட நிர்வாகத்தின் யாரும் மீற கூடாது என மாட்டு வண்டிக்காரர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து, 50 மாட்டு வண்டிகளில் ஏற்றி வந்த மணல் மீண்டும் பாலாற்றில் கொட்டப்பட்டது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai