சுடச்சுட

  

  சென்னைக் கம்பன் கழகம் சார்பில் குடியாத்தம் புலவர் வே.பதுமனாருக்கு  தமிழ்நிதி விருது வழங்கப்படுகிறது.

  புலவர் பதுமனாரின் தமிழ்ச் சேவையைப் பாராட்டி, சென்னைக் கம்பன் கழகம் சார்பில் சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் வரும் திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் இவ்விருது வழங்கப்பட உள்ளது.

  நிகழ்ச்சிக்கு சென்னைக் கம்பன் கழகத் தலைவர் இராம.வீரப்பன் தலைமை வகிக்கிறார்.

  இந்த நிகழ்ச்சியில் கம்பனில் நன்றி என்ற பொருளில் த.சத்தியப்பிரியா சிறப்புரையாற்றுகிறார். ஒருங்கிணைப்பாளர் இலக்கியவீதி இனியவன் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai