சுடச்சுட

    

    அரக்கோணத்தை அடுத்த வெங்கடேசபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன், ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரோஜா (40). இவர் சனிக்கிழமை மதியம் மார்க்கெட்டுக்கு நடந்து சென்றபோது, அவரது கழுத்தில் இருந்த 6 சவரனை பைக்கில் வந்த இருவர் பறித்துச் சென்றனராம். புகாரின்பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

    தந்தை மீது அம்மிக் கல்லை வீசிய மகன்

    அரக்கோணம் அசோக் நகர் அருகேயுள்ள அன்னை சிவகாமி நகரை சேர்ந்தவர் அருள் (55), காவலராகப் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். இவரது மகன் கார் டிரைவர் மைக்கேல் (25).

    மைக்கேல் மது அருந்திவிட்டு, தனது மனைவியை சனிக்கிழமை அடித்தாராம். இதை அருள் தட்டிக் கேட்டாராம்.

    அப்போது அருள் மீது அம்மிக்கல்லை மைக்கேல் வீசினாராம். இதில், பலத்த காயமடைந்த அருள் சென்னை அரசினர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்து, மைக்கேலை கைது செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai