சுடச்சுட

    

    ஆற்காட்டைச் சேர்ந்த

    ஜெயந்தி (24) , விபத்தில் இறந்தார்.

    இவர் தனது உறவினர் மோகனுடன் வேலூர் சாயிநாதபுரம் அருகே பைக்கில் சனிக்கிழமை சென்றார். அப்போது பைக்கும், லாரியும் மோதிக்கொண்டன. இதில், ஜெயந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

     டீக்கடையில் தீ விபத்து

    காட்பாடி தனியார் மருத்துவமனை முன்புறம் அமைந்துள்ள டீக்கடையில் சனிக்கிழமை எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து, தீவிபத்து ஏற்பட்டது. இதில் கடையில் இருந்த தளவாடங்கள் எரிந்து நாசமாயின. காட்பாடி தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தினர்.

    மண், மணல் கடத்தல்; வாகனங்கள் பறிமுதல்

    வேலூர் அருகேயுள்ள அரியூரை அடுத்த அத்தியூர் ஏரியில் மண் எடுத்ததாக, 5 லாரிகள், ஒரு ஜேசிபி மற்றும் 2 லாரிகளை போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

    வாலாஜாவில் லாரி பறிமுதல்: ராணிப்பேட்டை பொதுப்பணித் துறையின் உதவிப் பொறியாளர் கணேசன் வி.சி. மோட்டூரில் சனிக்கிழமை ரோந்து சென்றார். அப்போது மணல் கடத்தி வந்ததாக லாரியை அவர் பறிமுதல் செய்தார்.

    குடியாத்தத்தில் டிராக்டர் பறிமுதல்: குடியாத்தம் வட்டாட்சியர் எம். கஜேந்திரன் சனிக்கிழமை மாலை பாக்கம் கிராமம் அருகே சனிக்கிழமை ரோந்து சென்றபோது, மணல் கடத்தி வந்ததாக டிராக்டரை பறிமுதல் செய்தார். இதுதொடர்பாக பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் அசோக்குமாரை (27) பரதராமி போலீஸார் கைது செய்தனர்.

    கிணற்றில் ஆண் சடலம் கண்டெடுப்பு

    குடியாத்தம், ஜூலை 6: குடியாத்தம் அடுத்த பிச்சனூரில், விவசாயி சம்பத்துக்குச்  சொந்தமான கிணற்றில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பது சனிக்கிழமை தெரியவந்தது.

    இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் ஜீவரத்தினம் அளித்த புகாரின்பேரில், நகர போலீஸார் அங்கு சென்று தீயணைப்புப் படையினர் உதவியுடன் சடலத்தை மீட்டனர். இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

    காதல் திருமணத்தால் மிரட்டல்: போலீஸில் புகார்

    வாணியம்பாடி, ஜூலை 6: நாட்டறம்பள்ளியை அடுத்த வெலகல்நத்தத்தைச்  சேர்ந்த மாதையன் மகன் சரவணன் (29). இவர் ஓசூரில் தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். இவரும், பர்கூரை அடுத்த மருதப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகள் திவ்யாவும் (23) காதலித்து வந்தனராம்.

    இதற்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால், ஜூன் 27ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டு வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி இரு தரப்பினரையும் சமரசம் செய்துவைத்தார்.

    இந்நிலையில், சரவணின் தந்தை மாதையன் சனிக்கிழமை நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், திவ்யாவின் உறவினர்கள் 20 பேர் தனது வீட்டுக்கு  வெள்ளிக்கிழமை இரவு வந்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறியுள்ளார். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

    நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்; இளைஞர் கைது

    நாட்டறம்பள்ளி காவல் நிலைய ஆய்வாளர் பழனி, தனிப்படை உதவி ஆய்வாளர் ஏழுமலை மற்றும் போலீஸார் கொத்தூரில் சனிக்கிழமை ரோந்து சென்றனர்.

    அப்போது கொத்தூர் ரயில்வே கேட் அருகே நாட்டுத் துப்பாக்கியுடன் நின்றிருந்ததாக காளிகான்வட்டத்தை சேர்ந்த முருகன் மகன் தினேஷ் (21) என்பவரை கைது செய்தனர். துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.

    சிலிண்டர் வெடித்து பெண் சாவு; குடிசை தீக்கிரை

    வாலாஜாபேட்டை,ஜூலை 6: சோளிங்கரை அடுத்த கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி சக்திவேல் மனைவி செண்பகம் (23). இவர்களுக்கு குழந்தை இல்லை.

    சனிக்கிழமை சக்திவேல் பணிக்குச் சென்றிருந்தார். செண்பகம் சுமார் 5 மணிக்கு சமையல் செய்ய காஸ் சிலிண்டரை பற்றவைத்தாராம். அப்போது திடீரென சத்தம் கேட்டு, குடிசை வீடு தீக்கிரையாகியுள்ளது. தகவலின்பேரில் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, தீயை அணைத்தனர். பின்னர் தீயில் கருகி கிடந்த செண்பகத்தின் சடலத்தை மீட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai