Enable Javscript for better performance
கிணற்றில் இளம்பெண் சடலம் - Dinamani

சுடச்சுட

  

  வேலூர் அருகேயுள்ள அரியூரை அடுத்த தெள்ளூர்பாளையத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் இளம்பெண் சடலம் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

  தகவலின்பேரில் போலீஸார் சென்று தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் சடலத்தை மீட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இவர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  4 சவரன் நகை திருட்டு

  கே.வி. குப்பத்தை அடுத்த சென்னாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலாவதி (52). இவர் காட்பாடியில் வசிக்கும் தனது மகளைக் காண சனிக்கிழமை வந்துள்ளார். இவர் தனது கைப்பையில் 4 சவரன் நகைகளைப் போட்டு ஜன்னலோரத்தில் மாட்டி வைத்தாராம். இந்நகை திருடு போனதாம். புகாரின்பேரில் காட்பாடி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

  மின்வாரிய அதிகாரி நகை திருட்டு

  குடியாத்தம், ஜூலை 7: குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை, போடிப்பேட்டை சாலையில் வசிப்பவர் ஆர். அன்பரசன் (51). இவர் பரவக்கல் துணை மின் நிலையத்தில் இளநிலைப் பொறியாளராக வேலை செய்கிறார்.

  சனிக்கிழமை இரவு குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாராம். நள்ளிரவு மாடிப்படி வழியாக வீட்டின் உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 2 மடிக்கணினிகள், 3 செல்போன்களை திருடிச் சென்றுள்ளனர்.

  புகாரின்பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

  சூதாட்டம்: 10 பேர் கைது

  ராணிப்பேட்டை, ஜூலை 7: ரத்தினகிரி போலீஸார் சனிக்கிழமை மாலை பூட்டுத்தாக்கு-அம்மூண்டி சாலையில் சர்க்கார் தோப்பில் ரோந்து சென்றனர்.

  அப்போது அங்கு பணம் வைத்து சூதாடியதாக, மேல்மின்னல் கிராமத்தைச் சேர்ந்த பாரதிதாசன் (45), பாபு (21), சங்கர் (43), லோகநாதன் (21), குமார் (42) உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர்.

  கிணற்றில் விழுந்து ஊழியர் சாவு

  ராணிப்பேட்டை, ஜூலை 7: பொன்னை அருகேயுள்ள சீனிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (50), கிணற்றில் விழுந்து இறந்தார்.

  இவர் சிப்காட்டில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த வியாழக்கிழமை பணிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் இதே கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் இவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலின்பேரில் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் தாண்டவன் தலைமையிலான வீரர்கள் அங்கு சென்று, சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  விபத்தில் தொழிலாளி சாவு

  திருவலம் அருகேயுள்ள செம்பராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி வில்சன் (38), விபத்தில் இறந்தார்.

  இவர் ஞாயிற்றுக்கிழமை பைக்கில் காட்பாடிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, கார்ணம்பட்டு ரயில்வே புதிய மேம்பாலத்தில் பைக்கின் முன் சக்கரம் பழுதானதாம். அப்போது நிலைதடுமாறி மேம்பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

  அரசு பஸ்-லாரி மோதல்; 21 பயணிகள் காயம்

  வாணியம்பாடி, ஜூலை 7: காஞ்சிபுரத்திலிருந்து வேலூர் வழியாக பெங்களூர் செல்லும் அரசு பேருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. செட்டியப்பனூரில் இப்பேருந்தும், முன்னால் சென்ற லாரியும் மோதிக் கொண்டன. லாரி நிற்காமல் சென்றுவிட்டது.

  விபத்தில் பஸ் டிரைவர் சேகர் (54), நடத்துநர் ராஜா (29) உள்பட 21 பேர் காயமடைந்தனர். இவர்கள் வாணியம்பாடி, வேலூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai