சுடச்சுட

    

    வேலூரில் குடிபோதையில் வன்முறையில் ஈடுபட்டதாக 10 பேர் கொண்ட கும்பலை வேலூர் தாலுகா காவல் நிலைய போலீஸார் தேடி வருகின்றனர்.

    வேலூர், முள்ளிப்பாளையம், ராமமூர்த்தி தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (28).

    இவர் தனது நண்பர்களுடன் அப்பகுதி அருகேயுள்ள கழனிகாட்டுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை கிரிக்கெட் விளையாடினார். அப்போது கே.கே. நகரைச் சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பல் குடிபோதையில் அப்பகுதிக்கு வந்தது.

    கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டவர்களுடன் மோதலில் ஈடுபட்ட அக்கும்பல் அவர்களை தாக்கியதாம். இதில் கார்த்திகேயன் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அக்கும்பல் ராமமூர்த்தி தெருவில் புகுந்து அப்பகுதியில் நிறுத்தப்பட்ட 3 இருசக்கர வாகனங்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை சேதப்படுத்தியுள்ளது. மேலும் வீட்டு வாயில்களில் வைத்திருந்த பிளாஸ்டிக் குடங்கள், தண்ணீர் குவளைகள் உள்ளிட்டவற்றையும் அடித்து சேதப்படுத்திச் சென்றதாம்.

    தகவல் அறிந்த தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து வன்முறையில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai