சுடச்சுட

    

    தமிழக அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி பிரசாரம் மேற்கொள்வது என வேலூர் புறநகர் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை முடிவு செய்துள்ளது.

    ஆற்காட்டில் ஞாயிற்றுக்கிழமை பேரவையின் மாவட்டத் தலைவர் எம்.கே. மல்லிகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ரமலான் பண்டிகைக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு சுமார் 4 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்கிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    பேரவையின் மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான வி.கே.ஆர்.சீனிவாசன், மாநகர் மாவட்ட பேரவைச் செயலர் வி.முரளி, நிர்வாகிகள் ஏ.வி.ரகு, பி.பிச்சாண்டி, ஆற்காடு ஒன்றியக் குழுத் தலைவர் தாஜ்புரா எம்.குட்டி, நகர்மன்றத் தலைவர் ஆர்.புருஷோத்தமன், குடியாத்தம் ஒன்றிய பேரவைச் செயலர் எஸ்.எல்.எஸ்.வனராஜ், கட்சியின் மாவட்டப் பிரதிநிதி ஏ.ஜி.பிச்சைமுத்து, கணியம்பாடி ஒன்றியச் செயலர் எம்.ராகவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai