சுடச்சுட

    

    தமிழக மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவே விலையில்லா மடிக்கணினி

    By ஆம்பூர்,  |   Published on : 08th July 2013 03:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    : தமிழக மாணவர்களின் கல்வித் தரத்தை உலக அளவில் உயர்த்தவே மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினியை முதல்வர் ஜெயலலிதா வழங்குகிறார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி கூறினார்.

    ஆம்பூர் ஏ.எம்.இ.எஸ். கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா ஆம்பூர் வர்த்தக மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 200 மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி கே.சி. வீரமணி பேசியதாவது:

    கல்விக்கு அதிக முக்கியத்துவத்தை முதல்வர் ஜெயலலிதா அளித்து வருகிறார்.

    தமிழக மாணவர்களின் கல்வித் தரம் உயர வேண்டும்.  கிராமப்புற மாணவர்கள் கூட கணினி வல்லுநராகத் திகழ வேண்டும். அவர்கள் உலக அளவில் கல்வியில் முன்னுதாராணமாக திகழ வேண்டுமென்ற நோக்கில், கல்வித்துறை மூலம் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கி வருகிறார் என்றார் வீரமணி.

    விழாவில் எம்எல்ஏ அ.அஸ்லம்பாஷா, ஆம்பூர் முஸ்லிம் கல்விச் சங்கத் தலைவர் என். முஹம்மத் ஜக்கரியா,  கௌரவப் பொதுச்செயலர் என்.முஹம்மத் சயீத், கல்லூரி முதல்வர் ஏ. பெலிண்டா ஷாமினி, கல்விச் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் பிர்தோஸ் கே. அஹமத், என்.எம்.இஜட். நிறுவன மேலாளர் யு. தமீம் அஹமத், நகர்மன்றத் தலைவர் சங்கீதா,  அரசு மருத்துவமனை ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆர். பாலசுப்பிரமணி, ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தலைவர் எம். மதியழகன், ஆம்பூர் கூட்டுறவு வேளாண் விற்பனைச் சங்க தலைவர் ஆர். வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai