சுடச்சுட

    

    மனதை ஒருநிலைப்படுத்தி நல்லெண்ணங்களுடன் வாழ வேண்டும்'

    By வாலாஜாபேட்டை  |   Published on : 08th July 2013 03:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மனிதன் ஒவ்வொருவரும் தியானத்தையும், யோகா பயிற்சியையும் கடைபிடித்து மனதை ஒரு நிலைப்படுத்தி நல்லெண்ணங்களுடன் வாழ வேண்டும் என உலக சமாதான ஆலயத்தின் நிறுவனர் குருமகான் பரஞ்ஜோதி கூறினார்.

    வாலாஜா அருகேயுள்ள கீழ்புதுப்பேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்துக்கு அவர் சனிக்கிழமை வருகை தந்தார். பின்னர் தன்வந்திரி யோக மையத்தில் ஆன்மிக உரையாற்றி அவர் மேலும் பேசியதாவது:

    பிரார்த்தனையுடன் சங்கல்பமும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும்போதுதான் இறைநிலையை அடைய முடியும். அப்படிப்பட்ட நிலையை ஒவ்வொருவரும் அடையும்போது உலகம் நலமாக இருக்கும்.

    உடல்நலம் காக்கின்ற, பஞ்ச பூதங்களின் சக்தியை ஈர்த்து தருகின்ற மூலிகை வனத்தை கொண்ட, வாழ்வியல் ஆராய்ச்சி மையம் என்பதற்கு ஏற்ற அனைத்து விதமான அம்சங்கள் கொண்ட பீடமாக தன்வந்திரி பீடம் திகழ்ந்து வருகிறது என்றார் பரஞ்ஜோதி.

    தன்வந்திரி பீடாதிபதி முரளிதர சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai