சுடச்சுட

    

    மின்னூர் மற்றும் கடப்பேரியில் நடைபெற்ற விழாக்களில் 1,911 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லாப் பொருள்களான மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கப்பட்டன.

    ஆம்பூர் அருகேயுள்ள மின்னூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், 896 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை அமைச்சர் கே.சி. வீரமணி வழங்கினார்.

    விழாவுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் வசந்தி தலைமை வகித்தார். எம்எல்ஏ அ. அஸ்லம் பாஷா, ஆம்பூர் அரசு மருத்துவமனை ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆர். பாலசுப்பிரமணி, அதிமுக ஒன்றியச் செயலர் ஜோதிராமலிங்கராஜா, தொகுதிச் செயலர் அகரம்சேரி ஆர். வெங்கடேசன்,  வட்டாட்சியர் கஸ்தூரி, ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சங்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    கடப்பேரியில்...

    வாலாஜா அருகேயுள்ள கடப்பேரி ஊராட்சியில் 1015 பேருக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளை எம்எல்ஏ அ.முகமதுஜான், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சுமைதாங்கி சி.ஏழுமலை ஆகியோர் வழங்கினர்.

    விழாவுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் கே.டி. மல்லிகா நேரு தலைமை தாங்கினார்.  துணைத் தலைவர் ஆர்.ஜெ.சுரேஷ்குமார் வரவேற்றார்.

    நடிகர் தியாகு, ஒன்றியக் குழுத் தலைவர் வி.கே. நிர்மலா, ஊராட்சி மன்றத் தலைவர்கள் டி.ரகுபதி (சுமைதாங்கி), தனஞ்செழியன் (திருப்பாற்கடல்), உமா பிரகாஷ் (பூண்டி), துரைசாமி (குடிமல்லூர்), நகர்மன்றத் தலைவர்கள் வேதகிரி(வாலாஜா), சித்ரா சந்தோஷம் (ராணிப்பேட்டை), அதிமுக நிர்வாகிகள் மோகன், எம்.சி. பூங்காவனம், வட்டாட்சியர் பா.இரவிசந்திரன், மண்டலத் துணை வட்டாடசியர் சத்யா, வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் கல்யாண குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai