சுடச்சுட

  

  குறைதீர் கூட்டத்தில் ரூ.10 லட்சம் நலத் திட்ட உதவிகள்

  By வேலூர்  |   Published on : 09th July 2013 02:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், ரூ.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் பொ.சங்கர் வழங்கினார்.

  கூட்டத்தில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட 678 மனுக்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

  இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், வேலூர் தொகுதி எம்எல்ஏவுமான டாக்டர் வி.எஸ்.விஜய், ஆட்சியரை சந்தித்தார். அப்போது, வார்டுகள்தோறும் சென்று பொதுமக்களிடம் பெற்ற 345 குறைதீர் மனுக்கள் மற்றும் பட்டா கோரி வந்த 144 மனுக்களை அவரிடம் ஒப்படைத்தார்.

  அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயின்று மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் ஜி.சதீஷ்குமாருக்கு ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையும், மாணவி பி.ஸ்ரீபிரியாவுக்கு ரூ.7 ஆயிரத்துக்கான காசோலை, குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி விடுதி இலங்கைத் தமிழர் முகாமை சேர்ந்த 18 பெண்களுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களையும் ஆட்சியர் வழங்கினார்.

  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் உதவித் தொகையாக கல்லூரி மாணவ, மாணவியருக்கு தலா ரூ.13 ஆயிரம் வீதம் 6 பேருக்கும், தலா ரூ.10 ஆயிரம் வீதம் 9 பேருக்கும் வழங்கப்பட்டன.

  நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கை.பலராமன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயசீலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai