சுடச்சுட

  

  தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணி நிறைவு பெற்றால் விபத்துகள் ஏற்படாத நிலை உருவாகும்

  By ஆம்பூர்  |   Published on : 09th July 2013 02:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி நிறைவடைந்தால் விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படாத நிலை உருவாகும் என வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் எம். அப்துல் ரகுமான் கூறினார்.

  ஆம்பூரின் பல்வேறு அமைப்புகள் சார்பில் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை அப்துல் ரகுமானுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், அவர்  பேசியதாவது:

  தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியில் ஆம்பூர் நகர மக்களின் நலனை கருத்தில் கொண்டு 9 முறை மக்களவையில் பேசியுள்ளேன். 6 முறை அத்துறை அமைச்சரை சந்தித்து பேசியுள்ளேன்.  

  தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி முழுமையாக முடிந்த பிறகு ஆம்பூரில் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படாத வகையில் விரிவாக்கப் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.   விரிவாக்கப்பணி இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்கப்படும்.

  ஆம்பூர் நகரில் பைபாஸ் சாலை சந்திப்பு, ரயில் நிலையம் அருகே என 2 இடங்களில் அனைத்து வாகனங்களும் சென்று வரக் கூடிய அளவில் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க தலா ஒரு அன்டர்பாஸ், உமர்சாலையருகே, மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளியருகே என 2 இடங்களில் சிறிய வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் சென்று வரக்கூடிய அளவில் தலா ஒரு அன்டர்பாஸ் அமைக்கப்படுகிறது.  இப்பணி பிப்ரவரி 2014-ல்  முழுமையாக முடிவடையும்.    அப்பொழுது ஆம்பூரில் விபத்துகளே ஏற்படாத நிலை உருவாகும்.

  மேலும் விரிவாக்கப் பணிக்காக ஆம்பூரில் 0.5 மீட்டரிலிருந்து அதிகபட்சமாக 5 மீட்டர் வரை மட்டுமே நில ஆர்ஜிதம் செய்யப்படும்.  அதற்கு நில உரிமையாளர்களுக்கு நியாயமான இழப்பீடு கிடைப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

  இப்பணியை மேற்கொள்ள அனைத்து தரப்பு மக்களின் ஒத்துழைப்பு தேவை.  6 வழிச்சாலை என்பது தாற்காலிகத் தீர்வு தான்.  அதற்கு அடுத்தபடியாக ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலையாக ஏற்படுத்துவதற்கான ஆயத்தப் பணி துவங்கப்பட்டுள்ளது.  அதற்காக பாலாறு கரையோரம், ஆம்பூர் ரயில்பாதைக்கு மறுபுறம் உள்ள பகுதிகளை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர் என்றார் அப்துல்ரகுமான்.

  ஆம்பூர் இந்து கல்விச் சங்க அவைத் தலைவர் எம்.ஆர். காந்திராஜ், தலைவர் ஆர்.எஸ். ஆனந்தன், செயலர் ஏ.ஆர். சுரேஷ்பாபு, பொருளர் சி. ராமமூர்த்தி, துணைத் தலைவர் ஏ.பி. மனோகர், உதவிச் செயலர் ஜி.வாசு வெங்கடேசன், ஸ்ரீ வித்ய விஹார் கல்வி அறக்கட்டளை தலைவர் கே. குப்புசாமி, தொழிலதிபர் வெங்கடேசன், நகரின் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai