சுடச்சுட

  

  ராகிங் செய்தால் கடும் நடவடிக்கை:ஆட்சியர் எச்சரிக்கை

  By வேலூர்,  |   Published on : 09th July 2013 02:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் ராகிங்  நடவடிக்கையில் ஈடுபடும் மாணவ, மாணவியர் மீது கடும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆட்சியர் பொ.சங்கர் எச்சரித்துள்ளார்.

  கல்லூரிகளில் நடைபெறும் ராகிங் தொடர்பான தகவல்களை கட்டணமில்லா தொலைபேசி எண்களான மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டு அறை எண் 1077 மற்றும் காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டு அறை எண்கள் 1091, 1098 ஆகியவற்றை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

  கல்லூரிகள், மகளிர் பள்ளிகள் ஆகிய இடங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் மாற்று உடையில் காவலர்கள் ரோந்துப் பணி ஈடுபடுவர். அப்போது பிடிபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai