Enable Javscript for better performance
லாரி-மொபெட் மோதல்:அரசு பஸ் கண்டக்டர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருப்பத்தூர் அருகே லாரியும், மொபெட்டும் மோதிக் கொண்டதில், மொபெட்டில் சென்ற அரசு பஸ் கண்டக்டர் உயிரிழந்தார்.

    திருப்பத்தூரை அடுத்த காக்கங்கரை கிராமத்தை சேர்ந்தவர் அரசு பஸ் கண்டக்டர்  செல்வராஜ் (52). இவருக்கு மனைவி, 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர் தனது மொபெட்டில் நண்பர் சேகருடன் திருப்பத்தூர் நோக்கி ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றார். அப்போது எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிட முயன்றபோது, சாலையோரம் நின்ற லாரி மீது மொபெட் மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்வராஜ் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லும் வழியில் இறந்தார். சேகர் லேசான காயத்துடன் தப்பினார்.

    கந்திலி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai