சுடச்சுட

    

    வளர்ச்சித் திட்டப் பணிகள்:அமைச்சர் கே.சி.வீரமணி ஆய்வு

    By வாணியம்பாடி,  |   Published on : 09th July 2013 02:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாட்டறம்பள்ளி மற்றும் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

    நாட்டறம்பள்ளி: நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் நடைபெறும் தாய் திட்டம், பசுமை வீடு திட்டம், குடிநீர், சாலைப் பணிகள் குறித்து அமைச்சர் வீரமணி ஆய்வு செய்தார். தாமதமாகச் செயல்பட்டு வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளை அவர் கேட்டு கொண்டார்.

    எம்எல்ஏ கோவி.சம்பத்குமார், ஒன்றியக் குழுத் தலைவர் பாரதிராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணபதி, செந்தில்வேல், மாவட்ட  கவுன்சிலர்கள் ஜெயசக்தி, பிரேமலதா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் நடைபெற்ற ஆய்வின்போது, நிலுவையில் உள்ள பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் வீரமணி கேட்டறிந்தார். அப்போது ஒன்றியக் குழுத் தலைவர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பழனிசாமி, செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai