சுடச்சுட

  

  வெள்ளையப்பன் கொலை வழக்கில் ரகசியம் காக்கும் காவல் துறை

  By வேலூர்  |   Published on : 09th July 2013 02:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வேலூரில் கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி மாநிலச் செயலர் வெள்ளையப்பன் வழக்கில் குற்றவாளிகளை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட தனிப் படைகள் ரகசியம் காக்கின்றன.

  கொலை சம்பவத்தை திசைத் திருப்பும் வகையில், ஆபத்தான 5 குழாய் வெடிகுண்டுகள் அடங்கிய பை ஒன்றையும் மர்ம நபர்கள் விட்டுச் சென்றனர். குற்றவாளிகளை கண்டறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.விஜயகுமார், 5 டிஎஸ்பிக்களை உள்ளடக்கிய 5 தனிப் படைகளை அமைத்து விசாரணையை முடுக்கி விட்டார்.

  ஒருவாரம் கடந்துள்ள நிலையில், குற்றவாளிகள் விட்டுச் சென்ற தடயங்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் மூலம் குற்றவாளிகளை பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.

  இருப்பினும் இது தொடர்பான சிறு தகவல் கசிந்தாலும், குற்றவாளிகள் தப்பித்துச் செல்வதற்கு ஏதுவாக அமைந்துவிடும் என்பதால் தனிப் படையினர் அனைவரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

  இக்கொலை தொடர்பாக ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து எவ்வித தகவலும் தற்போது தெரிவிக்க இயலாது. குற்றவாளிகளை நெருங்கியதும் ஊடங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும் என காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai