அம்மா திட்ட முகாம்களில் நலத்திட்ட உதவி
By வாலாஜாபேட்டை | Published on : 10th July 2013 03:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாம்களில் மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வாலாஜா ஒன்றியத்துக்குள்பட்ட படியம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற முகாமுக்கு கோட்டாட்சியர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் படியம்பாக்கம் மூர்த்தி வரவேற்றார்,
"முகாமில் 171 மனுக்கள் வரப்பெற்றன. இதில், 106 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 62 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மற்ற மனுக்கள் பரிசீலனையில் உள்ளன' என வருவாய்த் துறையினர் கூறினர்.
பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை எம்எல்ஏ அ. முகமதுஜான் வழங்கினார்.
ஒன்றியக் குழுத் தலைவர் வி.கே.நிர்மலா, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் தனி வட்டாட்சியர் த.ராஜசேகரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் விஜயசெல்வம்,
அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலர் வன்னிவேடு ராதாகிருஷ்ணன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கடப்பேரி ராஜா, ஜெ.நரசிம்மன், டி.மருதமுத்து, டி.ராமச்சந்திரன், பரிமளா தியாகராஜன், அதிமுக நிர்வாகிகள் புல்லட் மூர்த்தி, சிப்காட் செல்வம், நகர்மன்றத் தலைவர்கள் வேதகிரி (வாலாஜா),
சித்ரா சந்தோஷம் (ராணிப்பேட்டை), ஊராட்சிச் செயலர் உமாபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சோளிங்கரில்...
சோளிங்கர் பேரூராட்சியில் நடைபெற்ற முகாமுக்கு வாலாஜா வட்டாட்சியர் பா.ரவிசந்திரன் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்றத் தலைவர் ஏ.எல்.விஜயன் வரவேற்றார்.
"முகாமில் 496 மனுக்கள் வரப்பெற்றன. 177 மனுக்கள் ஏற்கப்பட்டு, நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 279 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மற்ற மனுக்கள் பரிசீலனையில் உள்ளன' என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.
தேர்தல் பிரிவின் துணை வட்டாட்சியர் அன்பு, வட்ட வழங்கல் அலுவலர் ந.பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, பாபு, பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் ஜெகந்நாதன், மன்ற உறுப்பினர்கள் சுரேஷ், சீனிவாசன், பிரியதர்ஷினி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கோகிலா ராமு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மாதனூரில்...
மாதனூர் ஒன்றியம் குப்பம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற முகாமில், ஆம்பூர் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ஜெயக்குமார் மனுக்களைப் பெற்றார்.
துணை வட்டாட்சியர் கோட்டீஸ்வரன், அதிமுக ஒன்றியச் செயலர் ஜோதிராமலிங்கராஜா, ஆம்பூர் தொகுதிச் செயலர் அகரம்சேரி ஆர். வெங்கடேசன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் அன்பரசன், ஒன்றியக் குழு உறுப்பினர் ஜெய்சங்கர், வருவாய் ஆய்வாளர் சாந்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் சீனிவாசன், குப்புசாமி, சுந்தரேசன், பிரிவிதா, ஊராட்சி மன்றத் தலைவர்கள் குமார், நவகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். "முகாமில் 243 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 170 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 38 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 35 மனுக்கள் பரிசீலனைக்காக வைக்கப்பட்டுள்ளது' என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.
சோமலாபுரம் கிராமத்தில் நடைபெற்ற முகாமில், ஆம்பூர் வட்டாட்சியர் கஸ்தூரி மனுக்களைப் பெற்றார். வட்ட வழங்கல் அலுவலர் அப்துல் ஹமீத், வருவாய் ஆய்வாளர் முருகன், ஒன்றியக் குழு உறுப்பினர் கலையரசன், கிராம நிர்வாக அலுவலர்கள் வெங்கடேசன், சற்குணகுமார், சிவசங்கர், தேனருவி, சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
"முகாமில் 91 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 40 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 36 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 15 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன' என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.