சுடச்சுட

    

    ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் மற்றும் வேலைவாய்ப்பில் எஸ்.சி., எஸ்.டி இனத்தவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சியின் தலைவர் வி.எஸ்.ஐசக் கூறினார்.

    அரக்கோணத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில், அவர் மேலும் பேசியதாவது:

    தமிழர்கள் வாழும் பகுதியில் தேர்தல் நடத்தி 13-ஆவது சட்டத்திருத்தத்தைக் கொண்டு வரும் போக்கை மேற்கொள்ளும் இலங்கை அரசை இந்திய அரசு கண்டிக்க வேண்டும். தமிழர்கள் அவர்களது பகுதியில் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

    காவிரி பிரச்னையில் சீரிய நடவடிக்கை எடுத்து வரும் முதல்வர் டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மும்முனை இணைப்பு மின்சாரம் கொடுத்து விவசாயிகளை வாழவைப்பதற்கும், சீரிய முறையில் பசுமை வீடுகள் திட்டத்தை நிறைவேற்றி வருவதற்கும் பாராட்டுகிறோம்.

    தருமபுரி சம்பவத்தில் இளவரசனின் மரண வழக்கை விசாரணை செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும் என்றார் வி.எஸ்.ஐசக்.

    கூட்டத்தில் கட்சியின் தேசிய நிர்வாகிகள் பிரேமா ஐசக், வில்லியம்ஸ், மனோ டேனியல், ஷேக்தாவூத், சுரேஷ், ராமநாதன், நித்யானந்தம், நத்தானியேல், மாநில நிர்வாகிகள் மணியன், பாலாஜி, எம்.ஆர்.வெங்கடேசன், மாவட்ட நிர்வாகிகள் ஸ்ரீதர், லோகேஷ், நகர நிர்வாகிகள் சுப்பிரமணி, ஏகாம்பரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai