சுடச்சுட

    

    ஆம்பூர் நகரில் ஜூலை 15ஆம் தேதி முதல் ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடைபெறுகிறது என்று  நகர்மன்றத் தலைவர் சங்கீதா பாலசுப்பிரமணி கூறினார்.

    இதுதொடர்பாக ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அவர் பேசியதாவது:

    ஆதார் அடையாள அட்டைக்கு ஆம்பூர் நகரில் புகைப்படம், கருவிழி, கைரேகை ஆகியன பதிவு செய்யும் பணி ஜூலை 15ஆம் தேதி முதல் தொடங்குகிறது.  முதலில் 1 முதல் 3 வார்டில் வாக்குசாவடி அமைந்துள்ள இடத்திலேயே இப்பணி நடைபெறும்.

    இதற்காக ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவை வைத்துள்ளவர்கள் அனைத்தையும் கொண்டு வர வேண்டும். அதிலுள்ள தகவல்கள் பதிவு செய்து கொள்ளப்படும்.  இவற்றில் ஏதேனும் ஒன்று மட்டும் உள்ளவர்கள் தங்களிடம் உள்ளதை மட்டும் கொண்டு வந்தால் போதுமானது. இதுதொடர்பாக நகர்மன்ற உறுப்பினர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார் சங்கீதா.

    நகராட்சி ஆணையர் (பொறுப்பு) எல். குமார், ஆதார் அடையாள அட்டைக்கான ஒருங்கிணைப்பாளர் சதீஷ், நகராட்சி அலுவலர்கள் பிரேம் ஆனந்தன், வடிவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai