Enable Javscript for better performance
இளம்பெண் தற்கொலை வழக்கில் ஆட்டோ டிரைவர் கைது வேலூர்- Dinamani

சுடச்சுட

  

  இளம்பெண் தற்கொலை வழக்கில் ஆட்டோ டிரைவர் கைது வேலூர்

  By வேலூர்  |   Published on : 10th July 2013 03:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அருகேயுள்ள அரியூரை அடுத்த தெள்ளூர்பாளையம் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் இளம்பெண் சடலம் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

  பாகாயம் போலீஸார் நடத்திய விசாரணையில் இறந்தவர் வேலூர் சைதாபேட்டையைச் சேர்ந்த இரு குழந்தைகளின் தாய் சரளா (30) என்பதும், அவர் தோட்டப்பாளையத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் நாகராஜீடன் ஏற்பட்ட பழக்கம் ஏற்பட்டு, அவருடன் அரியூருக்கு கடந்த சில தினங்கள் முன்பு சென்றதும் தெரியவந்தது.

  இருவருக்குள் ஏற்பட்ட தகராறில் சரளா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும், பழி தன் மீது வந்துவிடுமோ என்ற அச்சத்தில் சடலத்தை  கிணற்றில் வீசிவிட்டு வந்து விட்டதாகவும் நாகராஜ் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். அதையடுத்து, அவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

  பெண்ணிடம் 5 சவரன் பறிப்பு

  நாட்டறம்பள்ளியை அடுத்த ஆத்தூர்குப்பைச் சேர்ந்தவர் விவசாயி கண்ணன் மனைவி ராணி (55). இவர் தனது நிலத்தில் திங்கள்கிழமை மாலை இருந்தபோது, அங்கு வந்த நபர், "இப்பகுதியில் செல்போன் டவர் அமைக்க இடம் தந்தால் மாதம் ரூ.10 ஆயிரம் வாடகை தருவோம்' என கூறியுள்ளார்.

  தனது நிலப் பகுதியைக் காட்டிய ராணியிடம் பூஜை செய்ய நகையும், பூஜை பொருள்களையும் அவர் கேட்டுள்ளார். 5 சவரன் நகையைக் கொடுத்த ராணி, பூஜை பொருள்களை வீட்டுக்குச் சென்று எடுத்து வருவதற்குள் மர்ம நபர் தலைமறைவானாராம்.

  புகாரின்பேரில் நாட்டறம்பள்ளி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

  மண் கடத்தல்: லாரிகள் பறிமுதல்

  ஆம்பூர்: ஆம்பூர் தார்வழி அருகே செவ்வாய்க்கிழமை மண் கடத்திச் சென்றதாக, லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

  தகவலின்பேரில் வட்டாட்சியர் கஸ்தூரி, கிராம நிர்வாக அலுவலர் கார்மேகம் உள்ளிட்டோர் இதை பறிமுதல் செய்தனர்.

  கே.வி.குப்பம்: காட்பாடி வட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி கே.வி. குப்பத்தில் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றார்.

  அப்போது மேல்மாயில் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் அனுமதியின்றி டிராக்டரில் மண் எடுத்துச் சென்றுள்ளது தெரியவந்தது. டிராக்டரை பறிமுதல் செய்து கே.வி. குப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

  வாலாஜா: வாலாஜா அருகேயுள்ள பூண்டி கிராமத்தில் மணல் கடத்தியதாக, லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

  காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் நாகராஜன் ஆகியோர் இதைப் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லாரி டிரைவர் வேணு (41) என்பவர் கைது செய்யப்பட்டார்.

  புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

  வாணியம்பாடி, ஜூலை 9: நாட்டறம்பள்ளி கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா ஆகிய புகையிலை பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

  பேரூராட்சியின் செயல் அலுவலர் ஜலேந்திரன், ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலர் எம்.சுந்தரமூர்த்தி, பேரூராட்சி அலுவலர்கள் சா.பாபு, கம்சலா, சுகாதார நிலைய ஆய்வாளர் ஆர்.சிவசங்கர் உள்ளிட்டோர் இதற்கான சோதனையை மேற்கொண்டனர்.

  பலாத்கார வழக்கில் இளைஞர் கைது

  குடியாத்தம், ஜூலை 9: பேர்ணாம்பட்டை அடுத்த சேராங்கல் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்கிறார்.

  இவர் திங்கள்கிழமை இரவு 7.30 மணியளவில் ரெவின்யூ ஸ்டாம்ப் வாங்கிவர வீட்டிலிருந்து சிறிது தொலைவில் உள்ள பெட்டிக் கடைக்குச் சென்றுள்ளார்.

  அப்போது அவரை அதே கிராமத்தைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி ராஜசேகரன் (23) என்பவர் வழிமறித்து, அருகில் உள்ள வனப் பகுதிக்கு தூக்கிச் சென்று மானபங்கம் செய்தாராம்.

  புகாரின்பேரில் பேர்ணாம்பட்டு காவல் ஆய்வாளர் அலெக்ஸ் வழக்குப் பதிந்து ராஜசேகரனையும், உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர்கள் வினோத் (23), பார்த்திபன் (20) ஆகிய 3 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

  குண்டர் சட்டத்தில் பெண் கைது

  ராணிப்பேட்டை, ஜூலை 9: அம்மூர் அருகேயுள்ள கல்புதூர் கிராமத்தைச் சேர்ந்த நாகப்பன் மனைவி சாந்தி (42), குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

  இவர் சாராயம் விற்றதாக பல முறை கைதாகி சிறைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், இவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

  காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், ராணிப்பேட்டை டிஎஸ்பி லாவண்யா ஆகியோரின் பரிந்துரையின்பேரில், சாந்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் உத்தரவிட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai