சுடச்சுட

  

  வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி உடல்நலக் குறைவால் இறந்தார்.

  காவேரிப்பாக்கம் பஜார் வீதி சுந்தர விநாயகர் திருக்கோயிலில் ஜூன் 14ஆம் தேதி நடைபெற்ற திருட்டு தொடர்பாக, அந்த ஊரை சேர்ந்த லோகநாதன் (48) உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.

  நீதிமன்ற உத்தரவின்பேரில், மூவரும் வேலூர் மத்தியச் சிறையில் காவலில் வைக்கப்பட்டனர். இவர்களில் லோகநாதன் தவிர மற்றவர்கள் ஜாமீனில் வெளி வந்தனர்.சிறையில் இருந்த லோகநாதனுக்கு திடீரென திங்கள்கிழமை இரவு உடல்நலம் குன்றியது. அதையடுத்து, மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டுச் செல்லப்பட்டார். வழியில் அவர் உயிரிழந்தார்.

  இதுகுறித்து பாகாயம் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai