சுடச்சுட

    

    குடியாத்தம், ராபின்சன் குள உள்கட்டமைப்புப் பணியின் போது சுவர் சரிந்ததால் உழவர் சந்தை தாற்காலிகமாக தார் சாலையில் நடைபெற்றது.

    தூர்வாரப்பட்ட ராபின்சன் குளத்தில் ரூ.2 கோடியில் உள்கட்டமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மழைநீர் தேக்கம், படிக்கட்டுகள் அமைக்கும் பணிகளுக்காக சுற்றுப்பகுதிகளில் பள்ளம் தோண்டும் பணி திங்கள்கிழமை நடந்தது. இதனால் உழவர் சந்தையின் சுற்றுச் சுவர் சரிந்து விழுந்தது.

    இதையடுத்து செவ்வாய்க்கிழமை சந்தைக்கு வந்த விவசாயிகள் தார் சாலையில் கடைகளை விரித்தனர்.

    நகர்மன்றத் தலைவர் அமுதா சிவப்பிரகாசம், உறுப்பினர்கள் ஆர்.கே.அன்பு, கே.கேசவன், எஸ்.கே.சுரேஷ், வசந்தி ஆறுமுகம், கம்பன் உள்ளிட்டோர் உழவர் சந்தை பகுதியை பார்வையிட்டனர்.

    பின்னர் இதுகுறித்து நகர்மன்றத் தலைவர் அமுதா சிவப்பிரகாசம் பேசும்போது, சுற்றுச் சுவர் சீரமைக்கும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai