சுடச்சுட

  

  வேலூர் மாநகராட்சி பகுதியில் திறந்தவெளிப் பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் ஆங்காங்கே ஆயத்தக் கழிவறைகளை நிறுவ கணக்கெடுப்பு நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு வேலூர் மண்டல நகராட்சிகளின் இயக்குநர் நடராஜன் தலைமை தாங்கினார். நகராட்சிகளின் நிர்வாக அலுவலக செயற்பொறியாளர் முருகேசன், மாநகராட்சி பொறியாளர் தேவக்குமார் மற்றும் வேலூர் மண்டலத்துக்குள்பட்ட பொறியாளர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

  மாநகராட்சி பகுதியில் சுற்றுப்புற சுகாதாரத்தை பேணும் வகையில் திறந்தவெளிப் பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தும் இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு ஒருநபர் கழிப்பறை அல்லது பொதுக் கழிப்பறை நிறுவுவது தொடர்பான கணக்கெடுப்பை தொடங்குவது எனவும், மாநகராட்சியில் தீர்மானம் கொண்டு வந்து அவற்றை நிறுவுவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதெனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai