Enable Javscript for better performance
பாலாற்றில் கட்டப்பட்ட வீடு இடிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஆம்பூர் பாலாற்றில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வீடு இடிக்கப்பட்டது .

    சார்-ஆட்சியர் ஷில்பா பிரபாகரின் உத்தரவின்பேரில், ஆம்பூர் வட்டாட்சியர் கஸ்தூரி, வருவாய் ஆய்வாளர்கள் நாகலிங்கம், முருகன், கிராம நிர்வாக அலுவலர்கள் கார்மேகம்,  சற்குணகுமார், கனகதுர்கா, கோவிந்தசாமி உள்ளிட்டோர் பாலாற்றில் சுண்ணாம்புகாளவாய் பகுதியில் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு ஒரு வீடு கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஜேசிபி இயந்திரம் மூலம் அந்த வீடு இடிக்கப்பட்டு, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai