மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
By வேலூர், | Published on : 10th July 2013 03:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
என்.எல்.சி. நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் வேலூரில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு நிர்வாகி எம்.பி.ராமச்சந்திரன், தொழிலாளர் முன்னேற்றக் கழக நிர்வாகி கே.ஆர்.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் தலைமை தாங்கினர்.
ஏஐடியூசி, ஐஎன்டியூசி, எச்எம்எஸ், பிஎம்எஸ் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் திரளானோர் இதில் பங்கேற்றனர்.